சினிமா செய்திகள்

மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்புநடிகர் மீது வழக்குப்பதிவு + "||" + Resistant to polio drugs On the actor Prosecutions

மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்புநடிகர் மீது வழக்குப்பதிவு

மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்புநடிகர் மீது வழக்குப்பதிவு
மகளுக்கு போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததாக பாகிஸ்தான் நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் நடிகர் பாவத் கான். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பாகிஸ்தான் சுகாதார துறையினர் வீடுவீடாக சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து வருகிறார்கள். லாகூரில் உள்ள நடிகர் பாவத் கான் வீட்டுக்கும் சென்றனர். ஆனால் அவரது மகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க விடாமல் மனைவி தடுத்துள்ளார்.

கார் டிரைவரும் போலியோ மருந்து கொடுக்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் திரும்பி சென்றனர். இதைத்தொடர்ந்து போலியோ மருந்து கொடுக்க எதிர்ப்பு தெரிவித்ததாக நடிகர் பாவத் கான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்தபோது பாவத் கான் வீட்டில் இல்லை. ஆனாலும் குடும்பத்தலைவர் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “போலியோ சொட்டு மருந்து கொடுக்க சென்றவர்களிடம் பாவத் கான் குடும்பத்தினர் முரட்டுத்தனமாக நடந்துள்ளனர்” என்றார்.