சினிமா செய்திகள்

நடிகரான நாஞ்சில் சம்பத் + "||" + Actor Nanjil Sampath

நடிகரான நாஞ்சில் சம்பத்

நடிகரான நாஞ்சில் சம்பத்
ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள எல்.கே.ஜி. படத்தில் அவரது தந்தையாக நாஞ்சில் சம்பத் நடித்து இருக்கிறார்.
அரசியல் வட்டாரத்தில் முன்னணி பேச்சாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். தி.மு.க.வில் இருந்து விலகி வைகோவுடன் ம.தி.மு.க.வுக்கு சென்ற அவர் பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன்பிறகு டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவினார். தற்போது அரசியலில் தீவிரமாக இல்லாமல் ஒதுங்கி இருக்கும் அவர் நடிகராகி உள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள எல்.கே.ஜி. படத்தில் அவரது தந்தையாக நடித்து இருக்கிறார். நேர்மையான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படம் இன்று திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வருகின்றன.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் நாஞ்சில் சம்பத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அட்லி இயக்கும் படமொன்றில் நடிக்கவும் பேசிவருகிறார்கள்.