சினிமா செய்திகள்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + DMDK vijayakanth  He meets you personally Actor Rajinikanth

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.
சென்னை

காங்கிரஸ் கட்சியில் மாநில தேர்தல் குழு உறுப்பினராக உள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்  நேற்று பகல் 11.55 மணிக்கு விஜயகாந்த் இல்லத்துக்கு திருநாவுக்கரசர் வந்தார். அவரை தே.மு.தி.க. மூத்த நிர்வாகி பார்த்தசாரதி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். முதலில் விஜயகாந்திடம் உடல்நலம் விசாரித்த திருநாவுக்கரசர், பின்னர் அங்கிருந்த பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும் பட்சத்தில், போதிய தொகுதிகள் பெற்றுத்தருவதாகவும் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த திருநாவுக்கரசர்  விஜயகாந்த் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். நானும் ஒரு அரசியல்வாதி. 2 பேர் சந்திக்கும்போது, நாட்டு நடப்பு மற்றும் அரசியல் பற்றி பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகி விடாதா? அதுவும் தேர்தல் நெருங்கும் வேளையில் இது சாத்தியமா?.

எனவே அரசியல் பேசினோம். நாட்டு நடப்பு எப்படி? என்று அவருக்கு நன்றாகவே தெரியும். எனவே நாட்டு நடப்பை மனதில் கொண்டு ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்று அவரிடம் எனது அபிப்ராயத்தை தெரிவித்திருக்கிறேன். அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. என கூறினார்.

இந்த நிலையில், இன்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.  விஜயகாந்த் வீட்டில் இன்று காலை நேரில் நலம் விசாரிக்கிறார் ரஜினிகாந்த்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம்; ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள்: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
காஷ்மீர் விவகாரத்தினை ராஜதந்திரமுடன் கையாண்டு இருக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார்.
2. காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. தாக்கு
காஷ்மீர் சரித்திரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? என்று நடிகர் ரஜினிகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம்சாட்டினார்.
3. தமிழக அரசை விமர்சித்த வழக்கில், விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தரவு
தமிழக அரசை விமர்சித்த வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
4. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வரவேற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
5. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.