சினிமா செய்திகள்

பிரபல திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் + "||" + Famous film director kodi Ramakrishna passed away

பிரபல திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

பிரபல திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்
பிரபல முன்னணி தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவர் தமிழில் அம்மன், கேப்டன் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'அருந்ததி' திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆனதோடு, அனுஷ்காவுக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. 

கோடி ராமகிருஷ்ணா மறைவிற்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.