சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம் + "||" + In anticipation Transgender role of Vijay Sethupathi

எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம்

எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன.
விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சீதக்காதியில் வயதான தோற்றத்தில் வந்த அவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். சமீபத்திய படங்களில் 96 அவருக்கு பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தை பிற மொழிகளிலும் போட்டி போட்டு தயாரிக்கின்றனர்.

அடுத்து சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி, மாமனிதன், தெலுங்கு, தமிழில் தயாராகும் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சூப்பர் டீலக்ஸ் படம் அடுத்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் வருகிறார். அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதியின் திருநங்கை வேடத்துக்கு வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.