சினிமா செய்திகள்

ரூ.100 கோடியை தாண்டிய மணிகர்னிகா வசூல்கங்கனா ரணாவத் மகிழ்ச்சி + "||" + To surpass Rs 100 crore Manikarnika collections

ரூ.100 கோடியை தாண்டிய மணிகர்னிகா வசூல்கங்கனா ரணாவத் மகிழ்ச்சி

ரூ.100 கோடியை தாண்டிய மணிகர்னிகா வசூல்கங்கனா ரணாவத் மகிழ்ச்சி
‘மணிகர்னிகா’ படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது.
கங்கனா ரணாவத் ஜான்சி ராணியாக நடித்த ‘மணிகர்னிகா’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் தயாரானபோதே வரலாறை திரித்து எடுப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் டைரக்டர் கிரிசுடன் மோதல் ஏற்பட்டு கங்கனா ரணாவத்தே சில காட்சிகளை டைரக்டு செய்தார்.

இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. இது கங்கனா ரணாவத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, “மணிகர்னிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் தயாராகி வெளிவந்தது. இந்த படத்துக்கு சர்ச்சைகளும் ஏற்பட்டன. அதையெல்லாம் மீறி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எதிரான விமர்சனங்கள் வரவில்லை. ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.