சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை புகார்:நடிகை திவ்யாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் + "||" + The actor apologized

பாலியல் தொல்லை புகார்:நடிகை திவ்யாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்

பாலியல் தொல்லை புகார்:நடிகை திவ்யாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்
பாலியல் தொல்லை புகாரில் நடிகர் அலென்சியா நடிகை திவ்யா கோபிநாத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்தி பட உலகை கலக்கிய மீ டூ இயக்கம் மலையாள திரையுலகையும் தாக்கியது. நடிகைகள் பலர் பாலியல் தொல்லைகள் பற்றி பேசினர். நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் எழுந்தது. இன்னொரு மலையாள முன்னணி நடிகரான அலென்சியா மீது நடிகை திவ்யா கோபிநாத் பாலியல் குற்றச்சாட்டு சொன்னார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

“நான் 4-வது படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். நடிகர் அலென்சியரை சந்திக்கும்வரை அவர் மீது மரியாதை வைத்து இருந்தேன். படப்பிடிப்பில் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தார். ஒரு நாள் ஓட்டலில் நான் தங்கி இருந்த அறைக்கு குடிபோதையில் வந்து படுக்கையில் உட்கார்ந்தார்.

இன்னொரு நாள் அறைக்குள் வந்து என் அருகே படுக்கையில் படுத்தார். நான் அதிர்ச்சியில் எழுந்தேன். அவர் எனது கையை பிடித்து இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள் என்றார். வெளியே போகுமாறு கூச்சல் போட்டேன். அதன்பிறகு வெளியே சென்று விட்டார். இவ்வாறு பதிவிட்டு இருந்தார்.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள நடிகைகள் சங்கமும் அவரை கண்டித்தது. இதனால் அலென்சியாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில் அலென்சியா நடிகை திவ்யா கோபிநாத்திடமும் மேலும் சில நடிகைகளிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அறிவித்து உள்ளார்.