சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.
குருவியாரே, கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்வதை நிறுத்திக் கொண்டாரா? (ஜி.கலை செழியன், சென்னை–20)

அவர் இப்போது கதை விவாதம் நடத்தி வருகிறார். அதோடு நடிப்பதிலும் ‘பிஸி’யாக இருக்கிறார். அவர் கைவசம் 10 படங்கள் உள்ளன. ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்ற படங்களில் அப்பாவாக நடிக்கிறார். அவர் எதிர்பார்க்கும் கதாநாயகனின் ‘கால்ஷீட்’ கிடைத்ததும், உடனே டைரக்டராக மாறி விடுவாராம்!

***

ஆர்யா நடிப்புக்கு விடுமுறை விட்டு, திருமண வேலைகளில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறதே? (எம்.தட்சிணாமூர்த்தி, திருக்கோவிலூர்)

அதற்கு முன்பு வெளிநாடுகளில் ஆர்யாவும், சாயிஷாவும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். ‘‘திருமணத்துக்கு முன்பே தேன்நிலவா? என்று இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள்!

***

குருவியாரே, நடிகை சங்கவி என்ன ஆனார், எங்கே போனார்? (பி.சுந்தரவல்லி, ஸ்ரீவைகுண்டம்)

சங்கவி திருமணத்துக்குப்பின், சொந்த ஊரான மைசூரு சென்று விட்டார். அங்கு அவர், கணவருடன் குடும்பம் நடத்தி வருகிறார்!

***

விஷால் நடித்த முதல் திரைப்படம் எது? அந்த படத்தை இயக்கியவர் யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)

‘செல்லமே!’ அந்த படத்தை இயக்கியவர், காந்தி கிருஷ்ணா!

***

குருவியாரே, பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட ஆர்யா, நடிகை சாயிஷாவிடம் காதல்வசப்பட்டு கல்யாணத்துக்கும் தயாரானது எப்படி? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘‘எந்த நடிகையிடமும் பார்க்காத அழகை அன்பே நான் உன்னிடம் கண்டேன்’’ என்று ஆர்யா காதல் வசனம் பேசி, சாயிஷாவை வசியம் செய்து விட்டாராம்!

***

தமிழ் பட உலகில் கேரள வரவுகள் குறைந்து விட்டது போல தெரிகிறதே...? (கே.கதிர்வேல் ராஜன், வேலப்பன்சாவடி)

மும்பை வரவுகள் அதிகமாகி விட்டதால், கேரள வரவுகள் குறைந்து விட்டதாம்!

***

குருவியாரே, தமன்னா, ஹன்சிகா, சமந்தா ஆகிய மூன்று பேரில், ‘செக்கச் சிவப்பான அழகி யார்? (லிங்கம் பிள்ளை, திருவனந்தபுரம்–24)

தமன்னா, மாசு மருவற்ற சிவப்பழகி. ஹன்சிகா, தங்க நிறத்தழகி. சமந்தா, மஞ்சள் நிறத்தழகி!

***

டாப்சியின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்புமா? (எஸ்.ஆர்.செல்வகுமார், திருச்சி)

இந்தி பட உலகம் கொடுக்கும் சம்பளத்துடன் ஒரு லட்சம் அதிகமாக கொடுத்தால், தமிழ் படத்தில் நடிக்க டாப்சி உடனே சம்மதிப்பாராம்!

***

குருவியாரே, வெற்றிமாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படப்பிடிப்பு எங்கே நடக்கிறது? அதில் தனுஷ் ஜோடி யார்? (கே.ஜெய்சிங், கிருஷ்ணகிரி)

‘வில்லு,’ ‘தாமிரபரணி,’ ‘சிங்கம்’ ஆகிய படப்பிடிப்புகள் நடந்த தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில், ‘அசுரன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தனுஷ் ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார்!

***

சிம்புவுக்கு முன்பே அவருடைய தம்பி குறளரசன் திருமணம் செய்து கொள்வார் என்று பேசப்படுகிறதே..? (இரா.வசந்தராஜ், கள்ளிடைக்குறிச்சி)

அப்படி ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலத்தை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்!

***

குருவியாரே, நயன்தாராவுக்கு ஆசான் யார்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

இப்போதைக்கு, ‘‘விக்னேஷ் சிவன்!’’

***

பிரபல கதாநாயகிகள் அனைவரும் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்களாமே...? (செ.பிரவின்குமார், வாகைக்குளம்)

ஒரு படத்துக்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிப்பதற்கு கிடைக்கும் சம்பளத்தை விட, விளம்பர படத்தில் மூன்றே நாட்களில் நடித்து முடித்தற்காக கிடைக்கும் சம்பளம் அதிகமாம். எனவே விளம்பர படங்களில் நடிப்பதில் பிரபல கதாநாயகிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்!

***

குருவியாரே, காஜல் அகர்வாலுக்கு எது அழகு, எது ‘மைனஸ்’? (எம்.பெரியசாமி, சின்னமனூர்)

காஜல் அகர்வாலுக்கு ஆளை விழுங்கும் அகலமான கண்கள், அழகு. பெரிய பல்வரிசை, ‘மைனஸ்!’

***

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிவதற்கு என்ன காரணம்? (எச்.முகமது அலி, கோவை)

எல்லா கதாநாயகர்களுக்கும் யோகி பாபுவை பிடிக்கிறதாம். அதை விட ஒரு மடங்கு மேலாக எல்லா கதாநாயகிகளுக்கும் அவரை ரொம்ப பிடிக்கிறதாம். அவர் தமாசாக பேசுவதை அப்படி ரசிக்கிறார்களாம்!

***

குருவியாரே, பழைய கதாநாயகிகள் சரோஜாதேவி, சவுகார்ஜானகி, விஜயகுமாரி ஆகியோர் எங்கே வசிக்கிறார்கள்? (வி.சுப்ரமணியம், பி.கொமாரபாளையம்)

சரோஜாதேவியும், சவுகார்ஜானகியும் பெங்களூருவில் வசிக்கிறார்கள். விஜயகுமாரி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரிய பங்களாவில் வசிக்கிறார்!

***

ஆண்ட்ரியா மூடி போர்த்திக் கொண்டு நடிப்பதற்கு ஒரு சம்பளம், கவர்ச்சியாக நடிப்பதற்கு இன்னொரு சம்பளம் என்று இரண்டு விதமாக சம்பளம் வாங்குகிறாராமே...அப்படியா? (கோ.வி.விஜயராஜ், கோவில்பட்டி)

ஆண்ட்ரியா இரண்டு விதமாக சம்பளம் வாங்குவது உண்மைதான் என்று எல்லா தயாரிப்பாளர்களும் சொல்கிறார்கள்!

***

குருவியாரே, திரைப்படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்த பிரபுதேவாவை கதாநாயகனாக அறிமுகம் செய்த டைரக்டர் யார்? (கே.சச்சின், விளாத்திகுளம்)

‌ஷங்கர்! நடன அமைப்பாளராக இருந்த பிரபுதேவாவை துணிச்சலுடன், ‘காதலன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர், இவர்தான்!

***

தனுஷ் ஆக்ரோ‌ஷமான சண்டை காட்சிகளில், டூப் நடிகரை தவிர்த்து தானே நடிக்கிறாரே...? அவருக்கு பயம் இல்லையா? (எஸ்.பி.சரவணன், கடலூர்)

‘‘இயல்பாகவே தனுஷ் தைரியமான சுபாவம் கொண்டவர். எதற்கும் பயப்பட மாட்டார்’’ என்று அவரை வைத்து படத்தை இயக்கிய ஒரு டைரக்டர் கூறுகிறார்!

***

குருவியாரே, தமிழ் டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்குவது ‌ஷங்கரா, முருகதாசா? (கே.ஆர்.உதயகுமார், சென்னை–1)

முருகதாசை விட, இரண்டு மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார், ‌ஷங்கர்!

***

கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம் செய்து கொள்வாரா, பெற்றோர்கள் பார்க்கும் மணமகனை மணந்து கொள்வாரா? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

கீர்த்தி சுரேசுக்கு திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடு இல்லையாம். ‘‘இப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன்’’ என்கிறார்!

***