சினிமா செய்திகள்

இளம் பெண் உதவி இயக்குநர் மர்ம மரணம்; வீட்டில் உடல் கண்டெடுப்பு + "||" + Young Malayalam filmmaker found dead at apartment in Kerala

இளம் பெண் உதவி இயக்குநர் மர்ம மரணம்; வீட்டில் உடல் கண்டெடுப்பு

இளம் பெண் உதவி இயக்குநர் மர்ம மரணம்; வீட்டில் உடல் கண்டெடுப்பு
இளம் பெண் உதவி இயக்குநர் நாயனா சூரியன் மர்ம மரணம் அடைந்துள்ளார்.
திருவனந்தபுரம்,

கேரள திரைப்படங்களில் பல படங்களுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்த இளம்பெண் நாயனா சூரியன் (வயது 28).  இவர் முதன்முறையாக கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த கிராஸ்வேர்டு என்ற பல குறும்படங்கள் கொண்ட தொகுப்பில் பல இயக்குநர்களில் ஒருவராக திரையுலகில் அறிமுகம் ஆனவர்.  அதன்பின் நடிகர்கள் விஜய் பாபு மற்றும் மைதிலி முன்னணி வேடங்கள் ஏற்று நடித்த பக்ஷிகளுடே மனம் என்ற படத்தினையும் இயக்கியுள்ளார்.

இதற்குமுன் அவர், பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.  அவர்களில் மறைந்த ராஜேந்திரன், கமல், ஜீத்து ஜோசப் மற்றும் டாக்டர் பிஜு உள்ளிட்டோர் முக்கியம் வாய்ந்தவர்கள்.

நாயனா உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல விளம்பரங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து பலமுறை நாயனாவின் மொபைல் போனுக்கு அழைப்பு விடுத்தும் பதில் வராத சந்தேகத்தில் அவரது நண்பர்களிடம் இதுபற்றி நாயனாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் நாயனா வசித்து வந்த குடியிருப்புக்கு சென்றுள்ளனர்.  அவர்கள் வீட்டின் முன்கதவை தொடர்ந்து தட்டியுள்ளனர்.  ஆனால் பதில் எதுவும் வரவில்லை.  இதனால் மாற்று சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்ற அவர்கள் படுக்கை அறையில் இறந்து கிடந்த நாயனாவை கண்டுள்ளனர்.

அவரது மரணம் பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.  எனினும் நாயனா நீரிழிவுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஜனவரி 14ந்தேதி இயக்குநர் ராஜேந்திரன் உயிரிழந்தது நாயனாவுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தியது என கூறப்படுகிறது.  முதன்முறையாக ராஜேந்திரனுக்கு உதவியாக தனது திரை பயணத்தினை நாயனா தொடங்கினார்.  கேரளாவின் கொல்லம் நகரில் ஆலப்பாடு பகுதியை சேர்ந்தவர் நாயனா.  இவரது தந்தை தினேசன் மற்றும் தாயார் ஷீலா ஆவர்.  நாயனாவின் திடீர் மரணம் கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.