சினிமா செய்திகள்

நடிகர் திலீப் மீதான நடிகை பாலியல் பலாத்கார வழக்கு; பெண் நீதிபதி விசாரணை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Actress on Dileep sex rape case; Woman judge inquiry - Kerala High Court directive

நடிகர் திலீப் மீதான நடிகை பாலியல் பலாத்கார வழக்கு; பெண் நீதிபதி விசாரணை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் திலீப் மீதான நடிகை பாலியல் பலாத்கார வழக்கு; பெண் நீதிபதி விசாரணை - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ், மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் ஒரு பிரபல நடிகை.
தமிழ், மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஒரு பிரபல நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கேரள மாநிலத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், பிரபல நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் நடிகை மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜா விஜயராகவன், கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

எர்ணாகுளத்தில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பெண் நீதிபதி ஹனி எம்.வர்கீஸ், இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.