சினிமா செய்திகள்

உண்மை கதையில் அமலாபால் + "||" + True story is Amalaal

உண்மை கதையில் அமலாபால்

உண்மை கதையில் அமலாபால்
அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ‘ராட்சசன்’ படம் நல்ல வசூல் பார்த்தது. இந்த படத்தை பிறமொழிகளிலும் எடுக்கிறார்கள்.
 தற்போது ஆடை, அதோ அந்த பறவை ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் ஆடை படத்தில் அவரது தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தி நடிகைகளை மிஞ்சும் வகையில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக இதில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தில் உள்ளன. விரைவில் அடுத்தடுத்து இவை திரைக்கு வர இருக்கின்றன. அடுத்து மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்துக்கு ‘கேடவர்’ என்று பெயர் வைத்துள்ளனர். அனுஷ் பிள்ளை என்ற அறிமுக டைரக்டர் இயக்குகிறார். திகில்-சஸ்பென்ஸ் படமாக தயாராகிறது. இந்த படம் கேரளாவில் ஒரு டாக்டர் கையாண்ட வழக்கின் உண்மை கதையாகும். தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கிறது. கேடவர் படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.