சினிமா செய்திகள்

பாடகி சின்மயி புதிய புகார் + "||" + Singer Chinmayi's new complaint

பாடகி சின்மயி புதிய புகார்

பாடகி சின்மயி புதிய புகார்
பாடகி சின்மயி ’மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.
பாடகிகள் உள்பட மேலும் சிலரது பாலியல் குற்றச்சாட்டுகளையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வாலிபர் ஒருவர் பள்ளியில் படித்தபோது தனக்கு நண்பன் ஒருவரால் பாலியல் தொந்தரவு ஏற்பட்டது என்றும், ஆண் குழந்தைகளுக்கும் இந்த தொல்லைகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதை சின்மயி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

சின்மயி கூறும்போது, “ஒரு வாலிபர் ஆசிரியரை விளையாட்டாக கேலி செய்து இருக்கிறார். அதை வைத்து அந்த வாலிபரை நண்பனே மிரட்டி இருக்கிறார். பிறகு பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து இருக்கிறார். ஆண் குழந்தைகளும் இதுபோன்ற தொல்லைகளில் சிக்குகிறார்கள்” என்று தெரிவித்து இருக்கிறார்.