சினிமா செய்திகள்

எகிப்திய கதையில் அஜித்குமார்? + "||" + Ajith Kumar in Egyptian story?

எகிப்திய கதையில் அஜித்குமார்?

எகிப்திய கதையில் அஜித்குமார்?
அஜித்குமார், விஸ்வாசத்துக்கு பிறகு போனிகபூர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரிமேக்காக இது தயாராகிறது. இதில் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். வினோத் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கோர்ட்டு அரங்கு அமைத்து வக்கீலாக அஜித் வாதம் செய்யும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதன் அருகிலேயே பிரபாஸ் நடிக்கும் தெலுங்கு படமான சாஹோ, மோகன்லால் நடிக்கும் ‘மாராக்கர்: அரபிக்கடலின்றே சிம்மம்’ என்ற மலையாள படம் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நடக்கின்றன.

அங்கு சென்று பிரபாசையும், இயக்குனர் பிரியதர்ஷனையும் அஜித் சந்தித்து பேசிவிட்டு வந்தார். தமிழில் தயாராகும் பிங்க் படம் வருகிற மே மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு அஜித் எகிப்திய படமான ‘ஹெப்தா: த லாஸ்ட் லெக்சர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதில் அஜித் டாக்டராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் அஜித் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. அஜித்தின் 60-வது படம் முழு கமர்ஷியல் படமாக இருக்கும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இந்த படத்தையும் இவரே தயாரிக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...