சினிமா செய்திகள்

பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தினார் : நடிகர் நானி மீது ஸ்ரீரெட்டி புகார் + "||" + Actress Sri Reddy complaint to actor Nani

பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தினார் : நடிகர் நானி மீது ஸ்ரீரெட்டி புகார்

பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தினார் : நடிகர் நானி மீது ஸ்ரீரெட்டி புகார்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிர வைத்தார்.
பிரபல இயக்குனர் கொரட்டல சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டினார். தற்போது டெலிவிஷன் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்போது நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நானி மீதும் செக்ஸ் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

அவர் கூறியதாவது:-

“நானி சினிமா வாய்ப்புக்காக போராடிய போது எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது திருமணம் ஆகாமல் இருந்தார். அவருக்கு புகை, மது, போதை பொருள் உள்ளிட்ட அனைத்து பழக்கமும் இருந்தது. அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி என்னுடன் பாலியல் தொடர்பும் வைத்துக்கொண்டார்.

சொன்னபடி எனக்கு பட வாய்ப்புகள் பெற்று தருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஒருநாள் மதுபாட்டில்களுடன் எனது வீட்டுக்கு வந்தார். என்னையும் குடிக்க தூண்டினார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன். நானிக்கு எதிராக வழக்கு தொடர நான் விரும்பவில்லை. எனது நோக்கமே படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்துக்கு எதிராக போராடுவதுதான்.

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.

ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டை நானியின் மனைவி அஞ்சனா மறுத்ததுடன் அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.