சினிமா செய்திகள்

திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை : கடன் பிரச்சினையில் தனுஷ் படம் + "||" + Talk to bring to the screen: Dhanush picture on credit issue

திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை : கடன் பிரச்சினையில் தனுஷ் படம்

திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை : கடன் பிரச்சினையில் தனுஷ் படம்
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பை 2016-ம் ஆண்டிலேயே தொடங்கினர்.
பட வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் இடையில் வேலை இல்லா பட்டதாரி-2, ப.பாண்டி, வடசென்னை ஆகிய படங்களில் தனுஷ் நடித்து, அவை திரைக்கும் வந்துவிட்டன.

எனை நோக்கி பாயும் தோட்டா பட தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டதால் கவுதம் மேனன் அதை நிறுத்தி விட்டு விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை எடுத்தார். ஒருவழியாக கடந்த வருடம் ஜூலை மாதம் 16-ந் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி அனைத்து பணிகளும் முடிந்தன. தணிக்கை குழுவும் படத்தை பார்த்து யூஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

தற்போது படத்தை வெளியிட படக்குழுவினர் தயாரானபோது மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு எனை நோக்கி பாயும் தோட்டா அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.