சினிமா செய்திகள்

விஜய் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா? பட நிறுவனம் விளக்கம் + "||" + Will Vijay's movie change the date of release? Film company description

விஜய் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா? பட நிறுவனம் விளக்கம்

விஜய் படம் ரிலீஸ் தேதியில் மாற்றமா? பட நிறுவனம் விளக்கம்
விஜய் நடிப்பில் கடந்த வருடம் ‘சர்கார்’ படம் வந்தது. தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 63-வது படம் ஆகும்.
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு 3-வது தடவையாக இவர்கள் கூட்டணியில் இந்த படம் தயாராகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் இதில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்றும் தகவல் பரவி உள்ளது. விஜய் விளையாட்டு பயிற்சியாளராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் விஜய் படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே முடிவடைய இருப்பதாகவும், எனவே படத்தை தீபாவளிக்கு முன்பாக ஆகஸ்டு மாதமே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர் என்றும் கடந்த சில தினங்களாக தகவல்கள் பரவின.

ஆனால் விஜய் படம் தீபாவளிக்குத்தான் திரைக்கு வரும் என்று ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளது.