என் மீது பொய் குற்றச்சாட்டு : மனைவி மீது தாடி பாலாஜி புகார்
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர். குடும்பத்தகராறு ஏற்பட்டு தாடி பாலாஜியும், நித்யாவும் பிரிந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றதன் மூலம் சமரசம் ஏற்பட்டு சேர்ந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு தாடி பாலாஜி மீது நித்யா மாதவரம் போலீசில் புகார் அளித்தார்.
அதில் தாடி பாலாஜி தகாத வார்த்தையால் பேசி தனக்கு தொல்லை கொடுப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து தாடி பாலாஜி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“என் மீது நித்யா சொல்லும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் திருந்துவார் என்று எதிர்பார்த்து நடக்கவில்லை. மகள் போஷிகா எனது பலம். அதை பயன்படுத்தி நித்யா எனக்கு தொல்லை கொடுக்கிறார். எனது மகளின் எதிர்காலமும் பாழாகிறது. சரியாக பள்ளிக்கு செல்லவில்லை.
எனது குழந்தைக்கு தேவையானதை செய்ய ஒரு தந்தையாக நான் தயார். மகள் படிப்பு செலவை நானே கவனித்துக் கொள்கிறேன். எனது குழந்தையை பார்க்க நித்யா என்னை அனுமதிப்பது இல்லை. எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி குடும்பத்தை பாழாக்கிய போலீஸ் அதிகாரி மீது கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நித்யா தேர்தலில் நிற்பேன் என்கிறார். முதலில் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தை பார்க்க முடியாத இவருக்கு நாட்டை பற்றி என்ன தெரியும்”
இவ்வாறு தாடி பாலாஜி கூறினார்.
Related Tags :
Next Story