லைலா மீண்டும் நடிக்கிறார்


லைலா மீண்டும் நடிக்கிறார்
x
தினத்தந்தி 2 March 2019 5:15 AM IST (Updated: 2 March 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா.

முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவருக்கு மெக்தின் என்ற தொழில் அதிபருடன் 2006-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் லைலா ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் கண்டநாள் முதல் படத்தில் நடித்த பிரசன்னா, கார்த்திக் குமார், லைலா மற்றும் படத்தை இயக்கிய பிரியா ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடப்பதாக அதில் கதாநாயகனாக நடித்திருந்த பிரசன்னா தெரிவித்து இருந்தார். எனவே அந்த படத்தில் லைலா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கு முன்னதாகவே ‘ஆலீஸ்’ என்ற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மணிசந்துரு டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து பிரபலமான ரைசா நடிக்கிறார். 

Next Story