சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் - நடிகை வரலட்சுமி


சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் - நடிகை வரலட்சுமி
x
தினத்தந்தி 3 March 2019 6:56 PM IST (Updated: 3 March 2019 6:56 PM IST)
t-max-icont-min-icon

சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தனது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள கல்லூரியில் நாப்கின் இயந்திரங்களை வழங்கிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வரலட்சுமி,

நமக்கு நாமே பாதுகாப்பு, தற்காப்பு என்பது பெண்களுக்கு அவசியம். சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும்.  சரத்குமாரின் அரசியலுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அரசியலை நன்கு கற்றுக்கொண்ட பிறகு சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story