பெண்களை இழிவுபடுத்தும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் - சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்
பெண்களை இழிவுபடுத்தும் நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள படம் '90 எம்.எல்'. படம் இரட்டை அர்த்த வசனங்களைக் கொண்டுள்ளதால் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இசை - சிம்பு. இயக்குநர் அனிதா உதீப், இதற்கு முன்பு குளிர் 100 டிகிரி படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பிறகு ஓவியா நடித்து வெளியாகும் படம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற காரணங்களால் இப்படத்துக்கு அதிக கவனம் கிடைத்துள்ளது. உலகளவில் இந்த படம் 500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி ஓவியா நடித்த '90 எம்.எல்.' என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம், இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், நடிகை ஓவியா நடித்துள்ள '90 எம்.எல்.' படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்த படத்தின் இயக்குநர் மற்றும் ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story