சினிமா செய்திகள்

“நான் கமலின் தீவிர ரசிகை” - நடிகை நிவேதா தாமஸ் + "||" + "I'm a serious fan of Kamal" - Niveda Thomas

“நான் கமலின் தீவிர ரசிகை” - நடிகை நிவேதா தாமஸ்

“நான் கமலின் தீவிர ரசிகை” - நடிகை நிவேதா தாமஸ்
தான் ஒரு கமலின் தீவிர ரசிகை என நடிகை நிவேதா தாமஸ் தெரிவித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை நிவேதா தாமஸ். அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறியதாவது:-

“எனக்கு சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள அரசிடம் விருதும் வாங்கினேன். குழந்தை நட்சத்திரமாக வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிவிட்டனர். சிலர் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டனர்.


ஆனால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது கதாநாயகியாகவும் மாறி விட்டேன். நான் மலையாள குடும்பமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். இதனால் தமிழ், மலையாள மொழிகள் தெரியும், இப்போது தெலுங்கும் கற்றுக்கொண்டேன். சினிமாவில் கதைதான் ஆத்மா. கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

நடிகர்-நடிகைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கதை நன்றாக இல்லாவிட்டால் படம் ஓடாது. எனவே சினிமாவுக்கு கதைதான் ஆத்மா. இந்த வருடம் எனது நடிப்பில் 5 படங்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்தது அதிர்ஷ்டம்.

அந்த நடிகையை விட இந்த நடிகை சிறப்பாக நடித்தார் என்று ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. கதாநாயகர்களோடு நடிகைகளை ஒப்பிட்டு பேசும் நிலை வரவேண்டும். நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.