பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணம்


பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணம்
x
தினத்தந்தி 6 March 2019 4:00 AM IST (Updated: 6 March 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி மரணமடைந்தார்.


பிரபல ஹாலிவுட் நடிகர் லூக் பெர்ரி. இவர் 8 செகண்ட்ஸ், த ஹீஸ்ட், ஸ்டோம், அமெரிக்கன் ஸ்ட்ரேஸ், பைனல் ஸ்டோம், ரெட் விங் உள்பட ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தார். டி.வி தொடர்களிலும் வந்தார். இவர் நடிப்பில் ஒளிபரப்பான ‘பெவர்லி ஹில்ஸ் 90210’ என்ற டி.வி தொடருக்கு அமெரிக்காவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

கடைசியாக லியானார்டோ டிகாப்பிரியோ, பிராட் பிட் ஆகியோருடன் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படம் வருகிற ஜூலை மாதம் திரைக்கு வருகிறது.

லூக் பெர்ரி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். அவருக்கு கடந்த மாதம் 27-ந் தேதி பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. மரணம் அடந்த லூக் பெர்ரி 1993-ம் ஆண்டு ராச்சல் மின்னி என்பவரை மணந்து 2003-ல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Next Story