சம்பளத்தை உயர்த்திய ரகுல் பிரீத் சிங்


சம்பளத்தை உயர்த்திய ரகுல் பிரீத் சிங்
x
தினத்தந்தி 7 March 2019 4:00 AM IST (Updated: 7 March 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ரகுல் பிரீத் சிங், தனது சம்பளத்தை உயர்த்தினார்.


நடிகைகள், படங்கள் வெற்றி பெற்றால் சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் அதிகபட்சம் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். தென்னிந்திய மொழி படங்களில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை வாங்குகிறார் என்கின்றனர்.

மார்க்கெட் இல்லாத நடிகைகள் 50 லட்சம் அல்லது ரூ.60 லட்சம் பெறுகிறார்கள். வளரும் இளம் நடிகையான ரகுல் பிரீத் சிங் ரூ.1 கோடிவரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்றுக்கு பிறகு அவர் நடிப்பில் தேவ் படம் திரைக்கு வந்தது. சூர்யாவுடன் என்.ஜி.கே. படத்திலும், சிவகார்த்திகேயனுடன் புதிய படத்திலும் நடிக்கிறார்.

தற்போது தெலுங்கில் மூத்த நடிகரான நாகார்ஜுனா ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் நடிக்க சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதே தொகையை அடுத்த படங்களுக்கும் சம்பளமாக நிர்ணயித்து உள்ளார்.


Next Story