சினிமா செய்திகள்

உடல் எடையை குறைக்க விரும்பாத வித்யா பாலன் + "||" + Vidya Balan who does not want to reduce body weight

உடல் எடையை குறைக்க விரும்பாத வித்யா பாலன்

உடல் எடையை குறைக்க விரும்பாத வித்யா பாலன்
உடல் எடையை குறைக்க விரும்பவில்லை என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்டி பிக்சர்’ படத்தில் நடித்து தேசிய விருதுபெற்ற வித்யா பாலன் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது அஜித்குமார் ஜோடியாக ‘நேர் கொண்ட பார்வை’ தமிழ் படத்தில் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“எனக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறீர்கள்? என்று நண்பர்கள் கேட்கிறார்கள். இப்போது எனது முழு கவனமும் சினிமா மீதுதான். எனக்கு புடவை பிடிக்கும் விழாக்களுக்கு புடவை கட்டி செல்லவே விரும்புகிறேன்.

தென்னிந்திய நடிகையாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. இப்போது ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் மற்றும், தெலுங்கில் வெளியான என்.டி.ஆர். வாழ்க்கை கதை படங்களில் நடித்ததன் மூலம் அது நிறைவேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நடிக்க வந்த புதிதில் வித்யாபாலனுக்கு நன்றாக நடிப்பு வராது, ஆடைகளும் மாடர்னாக உடுத்த மாட்டார், குண்டாக இருக்கிறார், நவீன விஷயங்களை பின்பற்ற மாட்டார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.

ரசிகர்கள் என்னை குண்டாக பார்க்கவே ஆசைப்படுகிறார்கள். எனவே எடையை குறைக்க விரும்பவில்லை.” இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.