சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா-நிவேதா பெத்துராஜ் + "||" + Vijay Sethupathi is pairing Rashikanna - Niveta Pethuraj

விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா-நிவேதா பெத்துராஜ்

விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா-நிவேதா பெத்துராஜ்
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை,’ ‘நம்நாடு,’ ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி,’ கமல்ஹாசன் நடித்த ‘நம்மவர்’ விஷால் நடித்த ‘தாமிர பரணி,’ அஜித் நடித்த `வீரம்' மற்றும் பாதாள பைரவி, மாயா பஜார், மிஸ்ஸியம்மா உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த நிறுவனம், விஜயா புரொடக்‌ஷன்ஸ். இந்த பட நிறுவனம் அடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் டைரக்டு செய்கிறார். பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள். நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார். நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். ஆர்.வேல்ராஜ் ஒளிப் பதிவு செய்கிறார். படப் பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. “அஞ்சலியை தவிர வேறு கதாநாயகியை நினைத்து பார்க்க முடியாது” படவிழாவில், விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள படம், ‘சிந்துபாத்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்து இருக்கிறார்.
2. விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. விஜய் சேதுபதியின் புதிய படம் ‘சங்கத்தமிழன்’
விஜய் சேதுபதியின் புதிய படத்துக்கு சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
4. சிம்பு படத்தில் நடிப்பது திரிஷாவா, ராஷிகன்னாவா?
`மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிப்பது திரிஷாவா, ராஷிகன்னாவா? என்பது விரைவில் தெரியும்.
5. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஆதரித்த விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.