சினிமா செய்திகள்

‘இம்சை அரசன்’ விவகாரம்: வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை? + "||" + 'Imsai Arasan' issue: Vadivelu new film banned?

‘இம்சை அரசன்’ விவகாரம்: வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?

‘இம்சை அரசன்’ விவகாரம்: வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?
இம்சை அரசன் பட விவகாரத்தில், வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை வருமா என தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து 2006-ல் திரைக்கு வந்து வசூல் குவித்த இம்சை அரசன் 23-ம் புலிகேலி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இயக்குனர் ஷங்கர் முடிவு செய்து அந்த படத்திலும் வடிவேலுவையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்து அரண்மனை அரங்கு அமைத்து படப்பிடிப்பையும் துவக்கினர்.

இதில் சில நாட்கள் நடித்த வடிவேலு, ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்ளிட்ட சில பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.

படம் நின்றுபோனதால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஷங்கர் கூறினார். இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் வடிவேலு ‘பேய் மாமா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர்.

தற்போது இந்த படத்துக்கும் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பதாகவும், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை முடிக்காமல் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று வற்புறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 9 மந்திரிகள் ராஜினாமா செய்த விவகாரத்தில் புதிய திருப்பம்: இலங்கையில் 2 முஸ்லிம் மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்
இலங்கையில் 9 முஸ்லிம் மந்திரிகள் பதவி விலகிய விவகாரத்தில் புதிய திருப்பமாக, 2 மந்திரிகள் மீண்டும் பதவி ஏற்றனர்.
2. ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்: தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்கு
ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3. என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம்: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம் தொடர்பாக, கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
4. விவசாயிகள் தற்கொலை விவகாரம்: கேரள சட்டசபையில் அமளி - எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக, கேரள சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
5. ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம்: இலங்கை உளவுத்துறை தலைவர் நீக்கம் - அதிபர் சிறிசேனா நடவடிக்கை
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.