சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம் + "||" + The famous Hollywood actress Jennifer Lopez is married to the 4th

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம்

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம்
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் 4-வது திருமணம் செய்ய உள்ளார்.

பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ். அனகோண்டா, பிளட் அண்ட் வைன், மெய்ட் இன் மான்ஹாட்டன், ஐஸ் ஏஜ்: காண்டினென்டல் ட்ரிபட், பார்க்கர், த பாய் நெக்ஸ்ட் டோர், ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஏராளமான பாப் பாடல் ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார்.

இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜெனிபர் லோபசுக்கு தற்போது 49 வயது ஆகிறது. இவர் ஓஜானி என்பவரை 1997-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பிறகு நடிகரும், நடன இயக்குனருமான கிறிஸ் ஜூட் என்பவருக்கும் ஜெனிபர் லோபசுக்கும் 2001-ல் திருமணம் நடந்தது. இந்த உறவும் 2 வருடத்தில் முறிந்தது. 2003-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பாடகரும், நடிகருமான மார்க் அந்தோணியை காதலித்தார். இருவருக்கும் 2004-ல் திருமணம் நடந்தது.

10 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு இந்த திருமணமும் முறிந்தது. 2014-ல் விவாகரத்து செய்து கொண்டனர். 4-வதாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.