விஜய்யின் புதிய படத்தை இயக்க விரும்பும் 5 டைரக்டர்கள்
விஜய்யை வைத்து இயக்க கதையுடன் டைரக்டர்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 63-வது படம். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராவதாகவும், இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் விஜய்யை வைத்து இயக்க கதையுடன் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் வினோத் தவிர மற்றவர்கள் ஏற்கனவே விஜய் படத்தை டைரக்டு செய்தவர்கள். இந்த நிலையில் இயக்குனர் மோகன்ராஜாவும் விஜய் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதுகுறித்து கல்லூரி விழா ஒன்றில் அவர் பேசும்போது, “விஜய் நடித்த வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
ஜெயம்ரவியை வைத்து தனி ஒருவன் இரண்டாம் பாகம் படத்தை எடுக்க மோகன்ராஜா தயாராகி வந்தார். இதில் எந்த படத்தை முதலில் எடுப்பார் என்று இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story