சினிமா செய்திகள்

கேயார் வெளியிடும் நகைச்சுவை படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’ + "||" + Keyar will release Comedy movie "Ayiram porkasukal"

கேயார் வெளியிடும் நகைச்சுவை படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’

கேயார் வெளியிடும் நகைச்சுவை படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’
திரைத்துறையில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ளவர், கேயார். தயாரிப்பாளராக, டைரக்டராக, வினியோகஸ்தராக பன்முக தன்மை கொண்டவர்.
வினியோகஸ்தராக 200-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டு இருக்கிறார். சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜய், தனுஷ் போன்ற பிரபல நாயகர்கள் நடித்த வெற்றி படங்களை அதிகமாக வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிசாத்தான்’, ஷங்கரின் ‘ஐ,’ ‘பாகுபலி’ ஆகிய படங்களின் 2 பாகங்களையும் வெளியிட்டு வெற்றி கண்டவர். பல புதுமுக நடிகர்கள் மற்றும் டைரக்டர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘ஈரமான ரோஜாவே’ உள்பட 14 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார்.

அடுத்து, கேயார் தனது கே.ஆர்.இன்போடைன்மென்ட் நிறுவனம் சார்பில், ‘ஆயிரம் பொற்காசுகள் என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் விதார்த், சரவணன், ஜானவிகா ஆகியோர் நடித்துள்ளனர். ரவி முருகையா டைரக்டு செய்திருக்கிறார். ஜி.ராமலிங்கம் தயாரித்து இருக்கிறார்.

“ஆயிரம் பொற்காசுகள்,’ ஒரு முழு நீள திரைப்படம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க தகுதியான படம். கோடை கால கொண்டாட்டமாக திரைக்கு வர இருக்கிறது” என்று கேயார் கூறுகிறார்.