சினிமா செய்திகள்

கொலை வழக்கில் தெலுங்கு நடிகர் கைது + "||" + Telugu actor arrested in murder case

கொலை வழக்கில் தெலுங்கு நடிகர் கைது

கொலை வழக்கில் தெலுங்கு நடிகர் கைது
தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்ய பிரசாத் கொலை வழக்கில் கைதாகி உள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் சிக்ருபதி ஜெயராம் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடா அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது அவரை மர்ம ஆசாமிகள் வழிமறித்து கொலை செய்தனர். இதுகுறித்து ஜூப்லி ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே ராகேஷ் ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்ய பிரசாத்தும் கைதாகி உள்ளார். மேலும் அவரது உதவியாளர் கிஷோர், நடிகை அஞ்சி ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கைது சம்பவம் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.