சினிமா செய்திகள்

பொள்ளாச்சி வீடியோ பார்த்து ஐஸ்வர்யா தத்தா ஆவேசம் + "||" + Pollachi Video Aishwarya Datta Obsession

பொள்ளாச்சி வீடியோ பார்த்து ஐஸ்வர்யா தத்தா ஆவேசம்

பொள்ளாச்சி வீடியோ பார்த்து ஐஸ்வர்யா தத்தா ஆவேசம்
நடிகர்-நடிகை உள்ளிட்ட திரையுலகினரும் பொள்ளாச்சி பாலியல் கொடுமையை கண்டித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும்படி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நடிகர்-நடிகை உள்ளிட்ட திரையுலகினரும் பொள்ளாச்சி பாலியல் கொடுமையை கண்டித்து வருகிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா இதுகுறித்து பேசி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:-

“பொள்ளாச்சி பாலியல் சம்பந்தமாக சில வீடியோக்களை நான் பார்த்தேன். அதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த தலைமுறையில் இருப்பவர்கள் நட்பை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக் கும் அம்மா, அக்கா, தங்கைகள் உள்ளனர் என்ற விஷயத்தை யோசிப்பது இல்லை.

பொதுவாக எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் ஓரிரண்டு மாதம் ஜெயிலுக்கு சென்று விட்டு பிறகு வெளியே வந்து மீண்டும் அதே தவறை செய்கின்றனர். இந்திய போலீஸ் மீது குற்றவாளிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டது. எனவே தயவு செய்து இந்த மாதிரி குற்றவாளிகளை சிறையில் அடைத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அவர்களை வெட்டி கொல்லுங்கள். இவர்கள் நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்.

இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார்.

குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்றும் டுவிட்டரில் வற்புறுத்தி உள்ளார்.

நடிகர் விஷால் டுவிட்டரில், “பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும். தூக்கு தண்டனைக்கு குறைவான தண்டனை வழங்க கூடாது” என்று கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...