சினிமா செய்திகள்

ஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்: நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்பு + "||" + Vishal - Anisha Wedding Engagement

ஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்: நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்பு

ஐதராபாத்தில் நடைபெற்ற விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்: நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்பு
விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.
ஐதராபாத்,

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனை தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார். 

இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் இன்று (16-ந் தேதி) ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். 2004-ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்றார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடியானது. தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.