சினிமா செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி வாழ்க்கை படத்தை வெளியிட எதிர்ப்பு + "||" + Narendra Modi Resistance to release the picture of life

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி வாழ்க்கை படத்தை வெளியிட எதிர்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நரேந்திர மோடி வாழ்க்கை படத்தை வெளியிட எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி எம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார்.
மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து குஜராத் முதல்வர் ஆனது 2014 தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் படத்தில் இடம்பெறுகின்றன.

இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி மோடி படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இது நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11-ந்தேதிக்கு மறுநாள் ஆகும்.


அதன்பிறகு தொடர்ந்து 6 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. எனவே மோடி வாழ்க்கை படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இந்த படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தேர்தல் நேரத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்
பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2. நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்தை தடுக்க முயற்சி?
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் வசிக்கிறார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்தார்.
3. காங்கிரஸ் ஆட்சி மீது பிரதமர் மோடி விளாசல்
படைகளுக்கு ஜீப் வாங்கியது தொடங்கி ஹெலிகாப்டர் வாங்கியது வரை ஊழல் மயம் தான் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடி வலைப்பக்கத்தில் எழுதி உள்ளார்.
4. நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று பேசுகிறார்
நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி (சவுகிதார்) என்று அழைத்து வருகிறார்
5. பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது - மு.க.ஸ்டாலின் அறிக்கை
பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாயும் கிடையாது, கூட்டணியும் கிடையாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.