சினிமா செய்திகள்

சரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும் + "||" + sky falle

சரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும்

சரத்குமார்-ராதிகா-விக்ரம் பிரபுவுடன் வானம் கொட்டட்டும்
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

டைரக்டர் மணிரத்னத்தின் சொந்த பட நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ், இதுவரை 37 படங்களை தயாரித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இதற்கு முன்பு உருவான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் அருண் விஜய், சிம்பு, அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்து இருந்தார்கள். மணிரத்னம் டைரக்டு செய்திருந்தார்.

இதையடுத்து, அவரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த தனசேகரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு, ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை நகரங்களில் நடைபெற இருக்கிறது.