சினிமா செய்திகள்

தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா + "||" + Ramya Nambisan plays the heroine in Tamil film.

தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா

தமிழரசன் படத்தில், ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் தமிழரசன் படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், சோனுசூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், ‘கும்கி’ அஸ்வின், மேஜர் கவுதம், சாமிநாதன், முனீஸ்காந்த், டைரக்டர் மோகன்ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார். 2 வருடங்களுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் சங்கீதா வில்லியாக நடித்தார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்கள் அமையாததால் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன். ‘தமிழரசன்’ படத்தில், என் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படும் விதத்தில் இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். மிகப்பெரிய ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டர் வேடம், இது. கனமான கதாபாத்திரம்” என்றார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப் பதிவு செய்கிறார். கதை- திரைக்கதை-வசனம்- டைரக்‌ஷன்: பாபு யோகேஸ்வரன். கவுசல்யா ராணி தயாரிக்கிறார். படப் பிடிப்பு சென்னையில் இரவு- பகலாக நடை பெறுகிறது.