வி.சி.குகநாதன் கதை-வசனத்தில் காவி ஆவி நடுவுல தேவி


வி.சி.குகநாதன் கதை-வசனத்தில் காவி ஆவி நடுவுல தேவி
x
தினத்தந்தி 19 March 2019 8:14 AM GMT (Updated: 19 March 2019 8:14 AM GMT)

1973-ம் ஆண்டில் வெளிவந்த காசியாத்திரை படத்தின் இரண்டாம் பாகம், காவி ஆவி நடுவுல தேவி என்ற பெயரில் தயாராகிறது.


1973-ம் ஆண்டில் வெளிவந்த ‘காசியாத்திரை’படத்தில் சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், சோ, மனோரமா ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற பெயரில் தயாராகிறது.

யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, சிங்கமுத்து, சிங்கம்புலி, ரோபோ சங்கர், கிங்காங், போண்டாமணி ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையில், 5 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வி.சி.குகநாதன் கதை எழுதி, புகழ்மணியுடன் இணைந்து வசனமும் எழுதியிருக்கிறார். புகழ்மணி திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார். இவர், மறைந்த டைரக்டர் ராம.நாராயணனுடன் இணைந்து வசனம் எழுதியதுடன் சில பக்தி படங்களை டைரக்டும் செய்திருக்கிறார். மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆஞ்சனேயர், ஐந்து தலை நாகம், அம்மன், ஆவி தொடர்பான காட்சிகள், ‘கிராபிக்ஸ்’சில் உருவாக்கப் படுகின்றன.




Next Story