தேர்தல் நேரத்தில் 2 தெலுங்கு படங்களை வெளியிட எதிர்ப்பு


தேர்தல் நேரத்தில் 2 தெலுங்கு படங்களை வெளியிட எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 8:11 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகி உள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை தேர்தலையொட்டி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.

காங்கிரஸ் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு கடிதமும் எழுதி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கில் தயாராகி உள்ள ‘லட்சுமி என்.டி.ஆர்’ மற்றும் ‘முதல்வர் அவர்களே நீங்க வாக்கு கொடுத்தீர்கள்’ ஆகிய 2 படங்களையும் தேர்தல் நேரத்தில் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லட்சுமி என்.டி.ஆர் படத்தில் என்.டி.ராமராவையும், சந்திரபாபு நாயுடுவையும் தவறாக சித்தரித்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

வருகிற 22-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். ஆனால் தெலுங்கு தேசம் கட்சி படத்துக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று தணிக்கை குழுவுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனால் படம் தள்ளிப்போகிறது.

முதல்வர் அவர்களே ‘நீங்க வாக்கு கொடுத்தீர்கள்’ பட இயக்குனர் போஸானி கிருஷ்ணனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள போஸானி கிருஷ்ணன் எனது படத்தை தடை செய்ய தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை. தணிக்கை குழுதான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல் கமிஷன் நோட்டீசை ஏற்று ஆஜராக மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Next Story