சினிமா செய்திகள்

ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார் + "||" + Actress Pooja Gandhi on police complaint

ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்

ஓட்டல் ‘பில்’ கட்டாமல் ஓட்டம் : நடிகை பூஜாகாந்தி மீது போலீசில் புகார்
தமிழில் கொக்கி, வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்தவர் பூஜா காந்தி, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
பூஜா காந்தி பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சில நாட்கள் தங்கி இருந்தார். வாடகை கட்டணத்தை அவர் செலுத்தவில்லை.

ஓட்டல் நிர்வாகத்தினர் பணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் ஓட்டலில் இருந்து பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் பூஜா காந்தி வெளியேறி விட்டார். இதனால் ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பூஜா காந்தி மீது போலீசில் புகார் அளித்தனர். புகார் மனுவில் ரூ.4.5 லட்சம் வாடகையை செலுத்தாமல் பூஜா காந்தி ஓடிவிட்டதாக கூறியிருந்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பூஜா காந்தியை நேரில் அழைத்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து ரூ.2 லட்சத்தை செலுத்திய அவர் மீதி பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளார். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் பூஜா காந்தி ஓட்டல் ‘பில்’லை கட்டாமல் ஓடியது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.