சினிமா செய்திகள்

வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை + "||" + Get into the house Attack: Jyothika's film director banned

வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை

வீடு புகுந்து தாக்குதல் : ஜோதிகா பட டைரக்டருக்கு தடை
மலையாள திரையுலகில் முன்னணி டைரக்டராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூ. காயங்குளம் கொச்சுன்னி, உதயனானுதாரம், மும்பை போலீஸ் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.
மஞ்சு வாரியரை வைத்து இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் அதை தமிழில் ஜோதிகா நடிக்க ‘36 வயதினிலே’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தையும் அவரே இயக்கினார்.

இந்த நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ அடிதடி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நள்ளிரவில் அடியாட்களுடன் மலையாள பட தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனி வீட்டுக்குள் சென்று அவரை தாக்கியதாக எர்ணாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆல்வின் ஆண்டனியின் மகன் ஜான் ஆண்டனி கூறும்போது, “ரோஷன் ஆண்ட்ரூ 40 அடியாட்களுடன் வீட்டுக்குள் புகுந்து எங்களை தாக்கினார். எனது தாயை கீழே தள்ளினார். ரோஷன் ஆண்ட்ரூவின் தோழி ஒருவருடன் நான் பழகியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் வீடு புகுந்து தாக்கியுள்ளார்” என்றார்.

இதனை மறுத்த ரோஷன் ஆண்ட்ரூ, “என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜான் ஆண்டனிக்கு போதை பழக்கம் இருந்தது. இதனால் அவரை நீக்கினேன். அதன்பிறகு என்னை பற்றி தவறான வதந்திகளை பரப்பினார். இதை தட்டி கேட்க சென்றபோது என்னையும், எனது நண்பர்களையும் ஜான் ஆண்டனியும் அவரது தந்தை மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர்” என்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூ படங்களில் பணியாற்ற மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.