சினிமா செய்திகள்

அரசியல் கதையில் நடிக்கிறார் : மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன் + "||" + Sunny Leone is back in Tamil film

அரசியல் கதையில் நடிக்கிறார் : மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்

அரசியல் கதையில் நடிக்கிறார் : மீண்டும் தமிழ் படத்தில் சன்னி லியோன்
ஆபாச பட நடிகை சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்து வந்தார். அவரை சக கவர்ச்சி நடிகைகள் எதிர்த்தனர். நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
பிரபல இந்தி கதாநாயகர்கள் சன்னிலியோனுடன் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். பெங்களூருவில் சன்னிலியோன் நடன நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சிக்கு அரசே தடை விதித்த சம்பவமும் நடந்தன.

தமிழில் விஷாலின் ‘அயோக்கியா’ படத்தில் ஒரு பாடலுக்கு சன்னிலியோனை ஆட வைக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் பெண்கள் படம் பார்க்க தயங்குவார்கள் என்று கருதி திடீரென்று அவரை நீக்கி விட்டு சனாகானை ஆடவைத்தனர். தற்போது வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் சன்னிலியோன் நடித்து வருகிறார். யுத்த களத்தில் வாள்சண்டையுடன் மோதும் அதிரடி ராணி கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிறது. கர்நாடகாவில் இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் இன்னொரு தமிழ் படத்திலும் சன்னிலியோன் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு டெல்லி என்று பெயரிட்டுள்ளனர். இதையும் வி.சி.வடிவுடை யான் இயக்குகிறார். அரசியல் படமாக இது தயாராவதாகவும் இதில் சன்னிலியோன் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.