சினிமா செய்திகள்

ரஜினிகாந்த்-விஜய் படங்களில், யோகி பாபு + "||" + In Rajinikanth-Vijay films, Yogi Babu

ரஜினிகாந்த்-விஜய் படங்களில், யோகி பாபு

ரஜினிகாந்த்-விஜய் படங்களில், யோகி பாபு
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 10 நிமிடங்களாவது வேண்டும் என்று டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள்.
திருமுருகன் தயாரிக்கும் ‘பட்டிபுலம்’ படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருவதை பெருமையாக கருதுகிறார், அந்த படத்தின் டைரக்டர் சுரேஷ். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“ஒரு படத்துக்கு நகைச்சுவை காட்சிகள் எந்த அளவுக்கு இருந்தால் ரசனை கூடும் என்று எனக்கு தெரியும். என் படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வந்து அமர்க்களப்படுத்துவார். ‘பைக் ரேஸ்’சினால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது? என்பதே இந்த படத்தின் கதை. யோகி பாபு, ‘பேய்’ என்ற வேடத்தில் வருகிறார்” என்றார்.

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திலும், அட்லீ டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய நகைச்சுவை வேடங்களில் யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.