சினிமா செய்திகள்

“என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி + "||" + A Character is shaked my husband Samantha interview

“என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி

“என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து சமந்தா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏற்கனவே 2 நடிகைகள் மறுத்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். முதலில் தயங்கி பிறகு துணிந்து நடிக்க சம்மதித்தேன். இந்த கதாபாத்திரம் குறித்து எனது கணவர் நாகசைதன்யாவிடம் கூறியபோது அதிர்ச்சியாக என்னை பார்த்தார். படம் திருப்தியாக வந்துள்ளது. டிரெய்லருக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். நானே டப்பிங்கும் பேசி உள்ளேன். விஜய் சேதுபதியின் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரம் திணிப்பாக இல்லாமல் யதார்த்தமாக பொருந்தி இருக்கிறது. திருநங்கைகள் மீது இருக்கும் சில எண்ணங்களை இந்த படம் உடைக்கும். டைரக்டராகும் எண்ணம் இல்லை. தயாரிப்பாளராகும் ஆசை இருக்கிறது.

கேப்டன் மார்வல் போன்ற சூப்பர் உமன் வேடங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. விளையாட்டு வீரர்களை மையமாக கொண்ட வாழ்க்கை கதையிலும் நடிக்க விரும்புகிறேன். முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எனது படங்களை வெளியிடுவது கணவருக்கு பிடிக்கவில்லை. கவர்ச்சி படங்களை நான் வெளியிடுவதாக விமர்சனங்கள் வருவது பற்றி எனக்கு தெரியாது. அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை. எனக்கு பிடித்ததை செய்கிறேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.