எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்


எனக்கு மிரட்டல்கள் : நடிகர் சித்தார்த் ஆவேசம்
x
தினத்தந்தி 20 March 2019 11:45 PM GMT (Updated: 20 March 2019 5:34 PM GMT)

‘சவ்கிதார்’ என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாகி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி. சவ்கிதார் என்பதற்கு பாதுகாவலர் என்று பொருள்.

 டுவிட்டரில் பிரதமர் தனது பெயருடன் சவ்கிதார் வார்த்தையை சேர்த்துள்ளார். அதைப் பார்த்த பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவும் தனது பெயருடன் சவ்கிதாரை சேர்த்தார்.

இதுபோல் பா.ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவ்கிதாரை இணைத்து டுவிட்டரில் பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்துக்கள் பதிவிடும் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் ஆவேசமாக கூறியிருப்பதாவது:-

“நான் தேவைப்படும்போதெல்லாம் அனைத்து பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன். ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. அவர்கள் என் மீது வெறுப்பு காட்டினார்கள். தவறாக பேசியும் இழிவுபடுத்தினார்கள். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கிதார் என்று அழைத்துக்கொள்கின்றனர்.

பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவினர் இப்போதும் என்னை பற்றி போலியான செய்திகளை பரப்புவதை நான் படித்து வருகிறேன்.”

இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.

Next Story