சினிமா செய்திகள்

புதிய படத்தில், 2 வேடங்களில் தனுஷ் + "||" + In the new movie, Dhanush in 2 roles

புதிய படத்தில், 2 வேடங்களில் தனுஷ்

புதிய படத்தில், 2 வேடங்களில் தனுஷ்
தனுஷ் நடித்து கடந்த வருடம் வடசென்னை, மாரி-2 படங்கள் வந்தன. இரண்டுமே தாதாக்களின் அதிரடி கதை. அதன்பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
ஜனவரியில் தொடங்கி இதன் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘கொடி’ என்ற அரசியல் படம் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இது தனுசுக்கு 39-வது படம் ஆகும். இந்த படத்தில் சினேகாவும் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டையில் இருவரும் நடித்து இருந்தனர்.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் தந்தை, மகன் ஆகிய 2 வேடங்களில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் தனுஷ், திருடன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தந்தை தனுசுக்கு ஜோடியாக சினேகா வருகிறார். மகன் தனுசுக்கு ஜோடி தேடி வருகிறார்கள். இந்த படத்துக்கு வெற்றிமாறன் வசனம் எழுதுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனுசுடன் நடிக்கும் ஹாலிவுட் நடிகர்!
தனுஷ் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். தனது கதாபாத்திரம் நடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக இருக்கிறதா? என்றும் பார்த்துக் கொள்கிறார்.
2. தனுசின் ‘பவர் பாண்டி’ 2-ம் பாகம்
தனுஷ் நடிப்பில் மாரி 2-ம் பாகம் படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.
3. 3 தோற்றங்களில், தனுஷ்!
வெற்றி மாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அசுரன்’.
4. இரட்டை வேடங்களில், தனுஷ்!
தனுஷ் கை நிறைய படங்களை வைத்து இருக்கிறார். இருப்பினும், சிறந்த கதையம்சம் கொண்ட பட வாய்ப்பு வந்தால், அதை தவிர்ப்பதில்லை.
5. ‘அசுரன்’ படத்தில் புதிய தோற்றத்தில் தனுஷ்
தனுஷ் நடிப்பில் வட சென்னை, மாரி-2 ஆகிய படங்கள் கடந்த வருடம் திரைக்கு வந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா தாமதமாகிறது.