சினிமா செய்திகள்

கன்னடத்தில், ‘பரியேறும் பெருமாள்’ + "||" + Pariyerum Perumal movie at kannada

கன்னடத்தில், ‘பரியேறும் பெருமாள்’

கன்னடத்தில், ‘பரியேறும் பெருமாள்’
கதிர்-ஆனந்தி நடித்து திரைக்கு வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். சாதி துவேஷங்களை பரியேறும் பெருமாள் படம் கடுமையாக சாடியது. பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த படத்தை பிறமொழிகளில் படமாக்க முயற்சிகள் நடந்தன. தற்போது கன்னடத்தில் ‘பரியேறும் பெருமாள்’ படம் தயாராகிறது. களவானி மாப்பிள்ளை படத்தை எடுத்த காந்தி மணிவாசகம் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க முன்னணி கன்னட நடிகர்கள் போட்டி போட்டனர். ஆனால் இமேஜ் இல்லாத புதுமுகம் நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நடிகர் தேர்வில் இயக்குனர் ஈடுபட்டு வந்தார்.

இறுதியில் புதுமுக நடிகர் மைத்ரேயா கதாநாயகனாக தேர்வாகி உள்ளார். இவர் ஏவி.எம்.சரவணன் பேத்தியும் எம்.எஸ்.குகன் மகளுமான அபர்ணாவை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்க மைத்ரேயா கர்நாடகாவில் உள்ள கிராம பகுதியில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி நடை உடை பாவனைகளை கற்று வருகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.