சினிமா செய்திகள்

அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா” + "||" + Famous cinima dance master Kala Joined the AMMk

அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”

அமமுகவில் இணைந்தார் பிரபல சினிமா “நடன இயக்குநர் கலா”
அமமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் சினிமா நடன இயக்குநர் கலா இணைந்துள்ளார்.
பாராளுமன்றம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.

இந்நிலையில், பிரபல சினிமா நடன இயக்குநர் கலா டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

நான் ஆறு மாதமாக வேறொரு வேலையில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தப் போது தினகரனின் நேர்மையான பேச்சு, துணிச்சலான செயல்பாடுகள், எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் என்னைக் கவர்ந்தன.

மேலும் கட்சியில் எனக்கு என்ன பணி கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து வேலை செய்வேன். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன பணி என்றாலும் யோசிக்காமல் பணியாற்றுவேன்.

இவ்வாறாக அவர் கூறினார்.

இதற்கு முன்னராக  பிரபல சினிமா பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.