சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம் + "||" + Trouble with Payment for Shooting: The delay in the election Rajinikanth's film

படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்

படப்பிடிப்புக்கு பணம் கொடுப்பதில் சிக்கல் : தேர்தலால் தாமதமாகும் ரஜினிகாந்த் படம்
ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளதால் அவரது அரசியல் பிரவேசம் தள்ளிப்போகிறது. இதற்கிடையில் 2 புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
 ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படத்தை இயக்குகிறார். இன்னொரு படம் படையப்பா 2-ம் பாகமாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர். முந்தைய படங்களில் லஞ்சம், விவசாயிகள் பிரச்சினைகள், ஊழல் ஆகியவற்றை சொல்லி இருந்தார். அவர் சொன்ன கதை பிடித்ததால் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார்.

படப்பிடிப்பை இந்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக அரங்குகள் அமைக்கும் பணியையும் ஆரம்பித்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் (எப்ரல்) 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.

இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அடுத்தமாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசிவருகிறார்கள். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.