சினிமா செய்திகள்

விஜய்தேவரகொண்டா-நடிகை நிஹாரிகா திருமணம்? + "||" + Vijaythevarakonda Actress Niharika is married

விஜய்தேவரகொண்டா-நடிகை நிஹாரிகா திருமணம்?

விஜய்தேவரகொண்டா-நடிகை நிஹாரிகா திருமணம்?
‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. ‘நோட்டா’ என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஹீரோ என்ற இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு பிறகு அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் சேர்ந்தனர்.
விஜய் தேவரகொண்டாவுடன் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இப்போது நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


நடிகை நிஹாரிகா தமிழில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்திலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் வருண்தேஜ் சகோதரி ஆவார். ஆனாலும் இதனை விஜய் தேவரகொண்டாவோ, நிஹாரிகாவோ உறுதிப்படுத்தவில்லை.

அவர்களின் குடும்பத்தினர் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறி உள்ளனர். விஜய் தேவரகொண்டா ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் திருமண தகவல் வெளியாகி உள்ளது.