சினிமா செய்திகள்

கதாநாயகிகளுக்குள் மோதலா? தமன்னா விளக்கம் + "||" + Confront the heroines Tamanna Description

கதாநாயகிகளுக்குள் மோதலா? தமன்னா விளக்கம்

கதாநாயகிகளுக்குள் மோதலா? தமன்னா விளக்கம்
தமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன.
கதாநாயகிகள் மத்தியில் போட்டியும் மோதலும் இருக்கும் என்றும் ஒருவருக்கு உள்ள வாய்ப்பை மற்றவர் தட்டி பறித்து செல்வது சினிமாவில் சாதாரணமாக நடக்கிற விஷயம் என்றும் பேசப்படுகிறது. தமன்னா இதனை மறுத்து கூறியதாவது:-


“ஒவ்வொருவர் சினிமா வாய்ப்புகளும் அவரவர் கையில்தான் இருக்கிறது. ஒருவர் பட வாய்ப்பை இன்னொருவர் பிடுங்கும் நிலை இங்கு இல்லை. கதாநாயகிகள் மத்தியில் நட்பு இருக்காது மோதிக்கொள்வார்கள் என்று நினைப்பது தவறு. இரண்டு கதாநாயகிகள் சினேகிதிகளாக இருந்தால் அது ஏதோ உலகத்தில் நடக்காத அதிசயம் மாதிரி பார்க்கிறார்கள்.

இயக்குனர்கள், கதாநாயகிகள், கேமரா மேன் என்று நிறைய பேர் நட்பாக பழகுவதை நான் பார்த்து இருக்கிறேன். எல்லோருக்கும் அவரவர் தொழிலில் போட்டி இருக்கத்தான் செய்கிறது.

திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தால் மட்டும்தான் போட்டி பொறாமை பயம் எல்லாம் ஏற்படும். சினிமாவில் 10 கதாநாயகிகள் இருந்தால் அவர்கள் திறமைக்கு ஏற்ப அவரவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து கொண்டேதான் இருக்கும். ஒரு வேளை திறமை இருந்தும் வாய்ப்பு அமையாவிட்டால் அதை அவர்களின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.”  இவ்வாறு தமன்னா கூறினார்.