சினிமா செய்திகள்

உலக கோப்பையை வென்ற கதை: கிரிக்கெட் படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள் + "||" + World Cup winning story: daughter of Kapil Dev as assistant director in the film

உலக கோப்பையை வென்ற கதை: கிரிக்கெட் படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள்

உலக கோப்பையை வென்ற கதை: கிரிக்கெட் படத்தில் உதவி இயக்குனராக கபில்தேவ் மகள்
உலக கோப்பையை வென்ற கிரிக்கெட் படத்தில், உதவி இயக்குனராக கபில்தேவ் மகள் பணியாற்றுகிறார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983-ல் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இதனை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். அந்த அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவாவும், சந்தீப் பட்டிலாக அவரது மகன் சீரங்கும் நடிக்கின்றனர்.

மேலும் பங்கஜ் திரிபாதி, சாஹில் கட்டார், சஹீப் சலீம், தாஹிர் ராஜ் பாசின் உள்பட பலர் நடிக்கின்றனர். கபீர் கான் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மே 15-ந் தேதி லண்டனில் நடக்கிறது. தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.

படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு மும்பை கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் சாந்து கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். உதவி இயக்குனர் என்ற முறையில் அமியா இதனை கவனித்து கொள்கிறார். சந்தீப் பட்டீல் மகன் சீரங் கூறும்போது, “எனது தந்தையும், அமியா தந்தை கபில்தேவும் உலக கோப்பையை வென்ற அணியில் இருந்தவர்கள். படப்பிடிப்புக்கான தினசரி வேலைகளை அமியா ஒருங்கிணைத்து வருகிறார். படம் சம்பந்தமான தகவல்களையும் அவர்தான் எங்களுக்கு தெரிவிக்கிறார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனியால் தவறிப்போன சதம்! ரகசியம் வெளியிட்ட கவுதம் கம்பீர்
உலக கோப்பை இறுதிப்போட்டியில் தன்னால் சதம் அடிக்க முடியாததற்கு டோனியும் ஒரு காரணம் என்று கவுதம் கம்பீர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
2. தீவிர வலைப்பயிற்சியில் டோனி, ரசிகர்கள் உற்சாகம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான டோனி, மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
3. அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் -நிதின் கட்கரி
அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
4. 2-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை நிர்ணயித்தது வங்காளதேசம்
இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 154 ரன்களை வங்காளதேச அணி நிர்ணயித்துள்ளது.
5. இந்தியா-வங்காளதேசம் இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
டாஸ் வென்ற வங்காளதேச கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.